தொடர்ந்து அதற்குரிய பணிகளை சுதாகர் தனது நிறுவன ஊழியர்களை கொண்டு செய்து வந்தார். இப்படி மூன்றாண்டுகள் பணிகளை பெஸ்ட் அண்ட் பாஸ்ட் மெட்டல் பேப் நிறுவனத்தினர் செய்துவந்த நிலையில் கோவை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேவையான கொட்டகை அமைத்துக் கொடுத்த பணத்தில் சுமார் 2 கோடியே 25 லட்சத்து 74 ஆயிரத்து 407 ரூபாயை கொடுக்காமல் ஞானவேல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.மேலும் அரசிடம் இருந்து இன்னும் பணம் வரவில்லை.இன்னும் சிறிது நாளில் பணம் வந்து விடும் என்று சி.கே.ஞானவேல் கூறியதை பெஸ்ட் அண்ட் பாஸ்ட் மெட்டல் பேப் நிறுவன இயக்குனர் சுதாகர் மற்றும் பங்குதாரர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நம்பி வந்தனர். இதையடுத்து இதேபோல மூன்று சக்கர குப்பை வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்கிய வகையில் 96 லட்சம் ரூபாயும் மற்ற பணிகள் செய்த வகையில் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாயும் என மொத்தமாக 3 கோடியே 76 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்தனர்.
இதையடுத்து இந்த நிறுவனத்தின் இயக்குனர் சுதாகர் மற்றும் அவரது பங்குதாரர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பலமுறை ஞான வேலை அணுகி பணத்தை கேட்ட பொழுது சுமார் ஒரு கோடியே 92 லட்சம் ரூபாயை மட்டும் பல தவணைகளாக கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்டபோது தராமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் அரசிடமிருந்து எனக்கு பணம் வரவில்லை என்று கூறி வந்தார் .இதை அடுத்து சுதாகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது பணம் அனைத்தும் ஸ்ரீ சக்ரா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது என்ற தகவலை கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர் மற்றும் ராதாகிருஷ்ணன் தாராபுரத்தில் உள்ள சி.கே.ஞானவேல் அலுவலகத்திற்கு சென்று கேட்டனர்.
அப்போது ஞானவேல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பணம் கொடுக்க முடியாது என்றும் பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். மேலும் ஞானவேல் புதிதாக பிரியம் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் எக்யூப்மென்ட்ஸ் என்ற பெயரில் புதிதாக நிறுவனத்தைத் தொடங்கி இதே போன்ற மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவதை அறிந்தனர்.இதையடுத்து சுதாகர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் இது குறித்து புகார் அளித்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஸ்ரீசக்கரா கம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்தி வந்த சி.கே.ஞானவேல் அரசிடம் இருந்து பணத்தை வாங்கி அதை பணி செய்த நிறுவனத்திற்கு தராமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீசக்ரா கம்ப்யூட்டர் நிறுவன சி.கே.ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு கால்நடை கொட்டகை அமைக்கும் திட்டத்தில் ஒதுக்கிய பணத்தை வாங்கிய நிறுவனம் அதை பணி செய்த நிறுவனத்திற்கு கொடுக்காமல் சுமார் இரண்டு கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்