கோவை : கோவையை அடுத்த கோவைபுதூரில் உள்ள மலை நகரை சேர்ந்தவர் மைதீன் இவரது மகள் சர்மிளா ( வயது 12) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் இவரது மகன் சியாம் (வயது 14 )அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலையில் வீட்டில் இருந்த இவர்கள் இருவரையும் திடீரென்று காணவில்லை விசாரணையில் இருவரையும் அதே பகுதியில் வசித்துவரும் செந்தில் என்பவரின் மனைவி பவித்ரா (வயது 35) ஆசை வார்த்தை காட்டி ஆட்டோவில் கடத்திச் சென்றதாக தெரியவந்தது இதுகுறித்து இருவரது பெற்றோர்களும் பேரூர் போலீசில் செய்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகிறார்கள் 2 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பவித்ராவுக்கு குழந்தைகள் இல்லை இதனால் இருவரையும் கடத்தி சென்றாரா? அல்லது விற்பனை செய்வதற்கு கடத்திச் சென்றாரா?என்பது தெரியவில்லை
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்