தூத்துக்குடி: கடந்த (16.12.2022) அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரநல்லூர் பகுதியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கம்பு மற்றும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஓட்டப்பிடாரம் குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் மகன் முருகன் (50) மற்றும் அவரது மகன் மாயகிருஷ்ணன் (20), ஆகியோரை ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளிகளான முருகன் மற்றும் மாயகிருஷ்ணன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துராமன், அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் ஓட்டப்பிடாரம் குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் மகன் 1) முருகன் மற்றும் அவரது மகன் 2) மாயகிருஷ்ணன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துராமன் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.