சென்னை: சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ 870 கிராம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதை பொருள், சூட்கேசில் ரகசிய அறைகள் மூலம் கடத்தி வரப்பட்டது. கடத்தி வந்த 2 ஆப்பிரிக்க பெண்கள் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.