தூத்துக்குடி : ஆறுமுநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 2 ½ லட்சம் மதிப்புள்ள 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது – எதிரிகளை கைது செய்த காவல் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முத்துகிருஷ்ணன், தலைமைக் காவலர் திரு. முத்துகுமார் முதல் நிலைக் காவலர் திரு. மாணிக்கம், பெண் முதல் நிலை காவலர் திருமதி. சியாமளா மற்றும் காவலர் திரு. ரமேஷ்கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (17.12.2020) ரோந்து சென்றபோது ஆறுமுகநேரி பேயன்விளை, கீழ தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் சக்தி விஜயன் (40) என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை, உடன்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த தாசன் மகன் ஜேக்கப் (55) என்பவரிடமிருந்து வாங்கி, விற்பனை செய்வதற்காக ஆறுமுகநேரி, பேயன்விளை, கீழ தெருவில் உள்ள தனது வீட்டின் பின்புறம் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி தனிப்படையினர் குடோனை சோதனை செய்ததில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலை பொருட்கள், 12 மூடைகள் இருப்பது தெரியவந்தது. இது சம்மந்தமாக ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து ரூபாய் 2,50,000/- மதிப்புள்ள 250 கிலோ புகையிலைப்பொருட்கள் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்திய ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி தலைமையிலான தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.