விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷண போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.இனயத் பாஷா தலைமையிலான போலீசார் முருங்கப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டபோது, 1960 மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதை கடத்தி வந்தவர் திண்டிவனம் பகுதியை சேர்ந்த கெஜராஜ் 34. என்பது தெரியவந்தது.இதையடுத்து, மதுபாட்டில்கள், காரை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கெஜராஜை கைது செய்தனர்.