கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தாள் .இந்த நிலையில் அந்த மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர்கள் கருமத்தம்பட்டிகாவல் நிலையத்தில் புகார் செய்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்( வயது 19) என்பவருக்கும் பிரீ பையர் விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டது .இது நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர் .இந்த நிலையில் சிறுமியை ஆசை வார்த்தை காட்டி மணிகண்டன் திருவண்ணாமலைக்குஅழைத்து சென்றுதிருமணம் செய்ததுதெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மணிகண்ட வையும், சிறுமியையும் கருமத்தம்பட்டி அழைத்து வந்தனர். மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.