சென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான காவல் ஆளிநர்களின் பிறந்த நாளன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் தனது வாழ்த்து செய்தியுடன், தனது கையொப்பமிட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை, பிறந்த நாள் கொண்டாடும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு வழங்கி, வாழ்த்து தெரிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, 15.10.2021, 16.10.2021 மற்றும் 17.10.2021 ஆகிய 3 தினங்களில் பிறந்த நாள் காணும் 19 காவல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை இன்று (12.10.2021) நேரில் அழைத்து தனது வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்து அட்டையை, காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் வழங்கினார்கள். மேலும், பிறந்த நாள் காணும் காவல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, பிறந்த நாளன்று அவர்களுக்கு “விடுப்பு” அளிப்பதுடன், “வான்செய்தி” மூலம் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறையிலிருந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சார்பாக பிறந்த நாள் வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்படுகிறது. காவல் ஆணையாளர் அவர்களின் வாழ்த்துகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் தங்களுக்கு கிடைத்ததினால் சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, காவல் ஆணையாளர் அவர்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்