தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் (01.12.2022), தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிமாறன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (30.11.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளமுத்துநகர், தஸ்நேவிஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் குடோன் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சரக்கு வாகனத்துடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த இசையன் மகன் போவாஸ் (33), தூத்துக்குடி சிலுவைப்பட்டி பகுதியை சேர்ந்த ஜீவா மகன் முத்துக்குமார் (30) மற்றும் தூத்துக்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் ராஜேஷ் (40) ஆகியோர் என்பதும் அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக மேற்படி சரக்கு வாகனத்தில் வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படை போலீசார் குற்றவாளிகளான போவாஸ், முத்துக்குமார் மற்றும் ராஜேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 3,60,000/- மதிப்புள்ள 18000 புகையிலை பாக்கெட்டுகள், ஒரு சரக்கு வாகனம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.