சேலம்: இன்று 29.10.2021-ஆம் தேதி சேலம் மாநகரம் தெற்கு சரகம், செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 175 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் திரு.நஜ்முல் ஹோதா,I.P.S., அவர்கள் தொடங்கி வைத்து,
பொதுமக்களிடையே உரையாற்றுகையில் தற்போதைய சூழலில் கண்காணிப்பு கேமராக்களின் முக்கியத்துவம் குறித்தும், ஒரு C.C.TV கண்காணிப்பு கேமரா நிறுவுவது 24 மணி நேரமும் 10 போலீஸ்காரர்கள் மற்றும் 10 வாட்ச்மேன்கள் பாதுகாப்பு செய்வதற்கு சமமாகும் என்றும்,
வருங்காலங்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் நவீன வளர்ச்சியின் காரணமாக மூன்றாவது கண் என கருதப்படும் C.C.TV கண்காணிப்பு கேமராவின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் எனவும், கண்காணிப்பு கேமரா நிறுவுவதன் மூலம் அவைகள் இருபத்தி நான்கு மணி நேரமும் தொடர்ந்து தனது பாதுகாப்பு பணியை செய்வதோடு, குற்றங்களை விரைவாக கண்டறிய பயன்படுகிறது.
C.C.TV கண்காணிப்பு கேமரா நிறுவுவதன் மூலம் நமது குடும்பம், நமது தெரு, நமது ஏரியா பாதுகாப்பாக இருப்பதை உணரலாம் எனவும், இதுபோன்று மேலும் மேலும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவதன் மூலம் நமது கிராமம், மாவட்டம், நகரம் நவீன பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும்.
விரைவில் சேலம் மாநகர் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் அதிகப்படியான கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
இவ்விழாவில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தெற்கு திரு.N.மோகன்ராஜ் அவர்கள், கூடுதல் காவல் துணை ஆணையாளர் திரு.M.கும்மராஜா (CWC) அவர்கள், காவல் உதவி ஆணையாளர் நுண்ணறிவு பிரிவு திரு.C.R.பூபதிராஜன் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.