சென்னை:ஏழுகிணறு பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோர்களின் கண்காணிப்பில்லாத நிலையில் குழந்தைகள் நல குழுமம் மூலம் கடந்த 4 மாதங்களாக காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி கடந்த 16.06.2021 அன்று காப்பகத்திலிருந்த காப்பாளரை தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
காணாமல் போன சிறுமியை காப்பக நிர்வாகிக்கு கிடைத்த தகவலின் பேரில் மணலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கண்டறிந்து விசாரிக்க 16 வயது சிறுமி 4 வருடங்களாக காதலித்து வந்த 17 வயது இளம்சிறாருடன் வந்து தங்கியதாகவும். மேலும் ஏற்கனவே இருவரும் தனிமையில் சந்தித்து பாலியல் தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேற்படி சம்பவம் குறித்து காப்பக Planning Officer லூர்துமேரி வ/39, என்பவர் W-12 துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் POCSO சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொடர்பில் இருந்த 17 வயது சிறுவனிடம் உரிய விசாரணை செய்யப்பட்டது.
W12 துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து சிறுமியுடன் பாலியல் தொடர்பில் இருந்த 17 வயது இளஞ்சிறார் 17.6.2021 அன்று சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.