கோவை : கோவையை சேர்ந்த தொழிலதிபர்கள் Tr. Ravi Sam, Adwaith industries, Tr. Rajkumar, Sakthi groups, Tmt. Malarvizhi, Krishna Industries, Tr.pranesvar Prabu, Vesta Groups ஆகியோர்களை கொண்டு கோவை மாநகரில் உடல் ரீதியான விபத்து மற்றும் பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்யும் நோக்கத்துடன் கவசம் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு முறைப்படி பதிவு செய்யப்பட்டு அறக்கட்டளையின் துவக்க விழாவானது கடந்த (06/01/2023) அன்று ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. அது சமயம் சுமார் 25 நபர்களுக்கு பள்ளி கல்லூரி கட்டணங்களுக்கான காசோலைகளும் ஒரு நபருக்கு தள்ளு வண்டியும் 10 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் கோவை மாநகரில் நடைபெற்ற உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட 159 வழக்குகள் பாலியல் 42 வழக்குகள் 12 கொலை வழக்குகள் 847 விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கன தேவைகளை கண்டறிந்து முதல் கட்டமாக (31/5/2023) ஆம் தேதி கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் கவசம் அறக்கட்டளை மூலமாக 17 நபர்களுக்கு சுமார் 5 லட்சம் மதிப்பிலான பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான கட்டண உதவிகளும் ஐந்து நபர்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது மேலும் அடுத்த கட்ட உதவிகளை வழங்குவதற்காக மேற்படி வழக்குகளில் இருந்து பயனாளிகள் விபரங்கள் மற்றும் அவர்களுக்கான தேவைகள் குறித்த விபரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்