நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.செந்தில்குமார், திரு.ராஜா மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 3 பேர் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அய்யனார் 32, ரமேஷ் 42, மாரிமுத்து 65 என்பது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 163 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.