சென்னை: சென்னை இராயபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலை அடுத்து உதவி ஆணையாளரின் தனிப்படையை சேர்ந்த என் -1 காவல் நிலைய போலிசார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்போது பழைய NRT பாலம் , கருமாரியம்மன் கோயில் பின்புறம் ஒரு பெண் உட்பட 5 நபர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் விசாரணை நடத்தியதில் கஞ்சா வைத்திருந்த ஆந்திரா விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரமணா 33, சத்யவதி, 32, மற்றும் புழல் பகுதியை சேர்ந்த மூவேந்தன் 29, காசிமேடு, பல்லவன் நகரை சேர்ந்த சுப்பிரமணி 42, சூர்யா 29, ஆகிய 5 பேர் ஆந்திராவில் மொத்தமாக கஞ்சாவை வாங்கி இரயில் மூலம் சென்னைக்கு வந்து , இராயபுரம் இரயில் நிலையம் அருகில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.