திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே கஞ்சா விற்பனை நடைபெருவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.N.கோட்டீஸ்வரன் அவர்களின் தலைமையில், திருவண்ணாமலை தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.சத்யாநந்தன், சந்தவாசல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.நாராயணன் மற்றும் தனிப்படை காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டம், கட்டிபூண்டி கிராமம், பூவரசம்மாள் தெருவைச் சேர்ந்த பாரத்குமார், 32, என்பவர் சந்தவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துவாம்பாடி ஏரிக்கறையின் அருகே கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தவரை கைது செய்து, சந்தவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரிடமிருந்து 160 கிராம் எடைகொண்ட கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்