வேலூர் : வேலூர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடக்கிறது. இங்கு பாதுகாப்பு பணிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து போலீசார் செல்கின்றனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திரு.பாஸ்கரன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திரு.மனோகரன், திரு.பூபதிராஜன், ஆகியோர் மேற்பார்வையில் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 160 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நேற்று சென்றனர். முன்னதாக வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ராஜேஷ்கண்ணன், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து அறிவுரை வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.