கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாளையத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி .அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார் .இவரை அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள கனியூரை சேர்ந்த விஜயகுமார் 28 என்பவர் ஆசை வார்த்தை காட்டி கடந்த மார்ச் மாதம் கடத்திச் சென்றார். பின்னர் அவரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யபட்டது .போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
                                











 
			 
		    

