திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை மணி பிரபு(22) என்பவர் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றி பலமுறை தனியாக இருந்துள்ளனர். தற்போது அந்த சிறுமிக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
இது தொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அமுதா அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்த மணி பிரபுவை பிரிவு 5(J) (ii) (n) r/w6 of POCSO Actன் படி வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா