திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் எடையூர் பகுதியில் (16), வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு T.P. சுரேஷ் குமார், அவர்கள் அதிரடி நடவடிக்கை , திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை – தில்லைவிளாகம் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமிக்கு எடையூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த திருமணம் தொடர்பான தகவலை (1098 தொலைபேசி மூலம்) அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக சம்மந்தபட்ட காவல் அலுவலர்களிடம் தக்க நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டத்தை தொடர்ந்து உடன் சம்மந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல் துறை அலுவலர்கள் மற்றும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் அலுவலர்கள் நேரில் சென்று சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு பெற்றோர்களை சந்தித்து பெண்ணிற்கு (18) வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் உங்கள் மகளுக்கு 18 வயது பூர்த்தியாகாத நிலையில் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என எச்சரித்து, சிறுமியை பெற்றோர்களிடமிருந்து மீட்டு திருத்துறைப்பூண்டி St. Theresa Home for Children ல் சிறுமியின் சம்மதத்துடன் தங்க வைத்துள்ளனர்.