சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் எஸ்.வி மங்கலம் அருகே மருதிபட்டி சேர்ந்த நாகசுந்தரம் என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 22.07.2020 அன்று வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத 6 நபர்கள் நாகசுந்தரம் மனைவியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் வீட்டில் இருந்த நகைகளை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து நாகசுந்தரம் அளித்த புகாரின் பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் துணை கண்காணிப்பாளர் திரு.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் 11.09.2020 அன்று கரடிப்பட்டி மொட்டைக்கோபுரம் ராஜா, முத்துராமு, திருவாடனை ஓரியூர் பிரித்திவிராஜ், கோட்டை ராஜா, வெள்ளையாபுரம் பாலகுமார், இளம்பரிதி என்பவர்கள் மீது u/s. 397 IPC – ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 16 பவுன் தங்க செயின் மற்றும் ரூபாய் 60 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி