தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கீழ வல்லநாடு, வல்லாகுளம் பகுதி சேர்ந்த சுடலைமுத்து மனைவி அமுதா (40), என்பவரது வீட்டில் கடந்த (24.09.2022), அன்று 5 சவரன் தங்க நகைகள் திருடுபோனது. இதுகுறித்து அமுதா அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அமுதாவின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் இசக்கித்துரை (26), என்பவர் மேற்படி அமுதா வீட்டிற்குள் புகுந்து 5 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அந்தோணிராஜ், குற்றவாளி இசக்கிதுரையை கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 1,50,000/- மதிப்பிலான 5 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தார்.