தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த எஸ் பட்டி மாந்தேரி ஏரிக்கரை பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு ரங்கசாமி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு சீனிவாசன் அவர்களின் தலைமையில் காவல்துறையினர் கள்ளச்சாராயத்தை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது 5 பரல்கள் இரண்டு பானைகளில் பதுக்கி வைத்திருந்த 1500 லிட்டர் ஊழல் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி கீழே ஊற்றி அழித்தனர்.