வேலூர் : விருதம்பட்டு B.M.D ஜெயின் ஸ்கூல் மாணவ மாணவியர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல்துறை இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியை சில்க் மில்லில் இருந்து காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் வரை நடத்தியது. இப்பேரணியில் சுமார் 1500 பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் 200 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஷ் கண்ணன்,இ.கா.ப அவர்கள் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் இப்பள்ளியின் தாளாளர் ருக்ஜி கே. ராஜேஷ் ஜெயின் இருந்தார்.
இந்நிகழ்ச்சியில் B.M.D ஜெயின் பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் போதை பொருட்களுக்கு எதிரான மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பற்றிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
மேலும் சாலையில் அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 10 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும், தலைக்கவசத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறி அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி திரு. ராஜேஷ் கண்ணன், இ.கா.ப அவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சி நிறைவாக பள்ளியின் மாணவர்கள் சாலை விபத்து சம்பந்தமான ஒரு பாடலுக்கு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது காண்பவரை வியப்பில் ஆழ்த்தியது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்