கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் வரை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. வாக்கும் எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது . மத்திய மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இருக்கும் அறைகளில் 70 கேமராக்களும். வெளிப்புற பகுதிகளில் 80 கேமராக் களும் என மொத்தம் 150 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த காமிராக்களில் படம் பிடிக்கப்படும் காட்சிகளும் நேரலையாக தெரியும் வகையில் பிரம்மாண்டமான டிவி திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .மேலும் கட்சிகளின் முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்து 24மணி நேரமும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் நேற்று கண்காணிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் தேவையான அடிப்படை வசதிகளை செய்யுமாறு அறிவுரை கூறினார்.
நமது குடியுரிமை நிருபர்
![](https://34.68.197.11/wp-content/uploads/gokul.png)
A. கோகுல்