தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் உட்கோட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி . பூரணி அவர்களின் உத்தரவின் படி அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் திருமதி.வனிதா மற்றும் அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மணவாளன், ஆகியோர்கள் அடங்கிய போலீசார் அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்தில் உள்ள மாத்தூர் பகுதியில் இன்று (10/05/2023 ) காலை தீவிர வாகன சோதனை மேற்கொண்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த வெள்ளை நிற ஹோண்டா ஆக்டிவா வண்டியை ஓட்டி வந்தவர் போலீசாரை கண்டதும் வண்டியை நிறுத்தாமல் தப்பி செல்ல இதனை தொடர்ந்து போலீசார் அந்த வண்டியை விரட்டி பிடித்து பார்த்ததில் அதில் சுமார் 150 மது பாட்டில்கள் இருந்தது அதனை தொடர்ந்து 150 – மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆக்டிவா ஆகியவற்றை பறிமுதல் செய்து வாகனத்தை ஓட்டி வந்த சுரேஷ் (40), என்பவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள், இதில் அந்நபர் அரசு அனுமதியின்றி மதிபாட்டில்களை அதிக விலைக்கு டூவீலரில் வைத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அதனை தொடந்து மேற்படி நபரை கைது செய்து தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்