கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய பகுதியில் மரிகுட்டை கிராமத்தில் எதிரியின் வீட்டின் பின்புறம் உள்ள குளத்தின் அருகே மற்றும் பூலபள்ளம் ஓடையில் அருகில் ஆகிய இரு இடங்களில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் சோதனை செய்தபோது சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 5 லிட்டர் சாராயம், 150 லிட்டர் ஊரல் பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே
கொட்டி அழித்து குற்றவாளிகளுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.