சென்னை: அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி கடந்த 01.12.2021 அன்று முதல் காணவில்லை என சிறுமியின் தந்தை, T-13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் பேரின் ‘சிறுமி காணவில்லை’ என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
T-13 குன்றத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டதில், பாண்டியன் என்பவர் மேற்படி 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் காவல் குழுவினர் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிபாண்டியன் 24, குன்றத்தூர் என்பவரை கைது செய்தனர். மேற்படி குற்றவாளி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை