புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே, IPS., அவர்கள் காவல் நிலையங்களில் பதிவான தொலைந்த போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கடந்த இரண்டு வாரங்களில் சைபர் கிரைம் காவல் துறை மூலம் 75 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. வந்திதா பாண்டே, I.P.S அவர்களால் (26.05.2023) தேதியன்று உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது. கடந்த 5.5.23ந் தேதி 105 செல்போன்கள் உட்பட சுமார் ஒன்றரை ஆண்டுகளில் ரூ.55,50,000 மதிப்புள்ள 275 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களிலும் காணாமல் போன செல்போன் சம்மந்தமான புகார்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைக்க காவல் கண்காணிப்பாளர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.