கோவை: கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி திரு.சுதாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
முழு ஊரடங்கின்போது போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கோவை மேற்கு மண்டலத்தில் மதுபாட்டில், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சல், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
மதுபாட்டில் கஞ்சா விற்பனை ,கள்ளச்சாராயம் காய்ச்சல் ,சூதாட்டம் என 1,956 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, இதில் 3550 பேர் கைது செய்யப்பட்டனர். மது விற்பனை தொடர்பாக 1,750 வழக்குகள் மற்றும் 7,508 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்து அளிக்கப்பட்டது. 19,451 லிட்டர் கள்ளச் சாராய ஊறல் 2 லட்சத்து 12 ஆயிரத்து 497 லிட்டர் பிராந்தி, 33 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.