திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆர் டிஓ செல்வம் தலைமையில் தாசில்தார் செல்வகுமார்,கவரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பாபு,காவலர்கள் சுரேஷ்,ராமதாஸ்,பாண்டியம்மாள் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னைக்கு வந்த அரசுப் பேருந்தை மடக்கி சோதனையிட்டனர்.அப்போது பேருந்தில் பயணம் செய்த தேனி,கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா (48) த/பெ மாயாண்டி தேவர் என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து பையில் வைத்திருந்த 15 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது பின்னர் அவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கவரைப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்