சேலம் : நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் 20 உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கடந்த ஒரு வாரமாக சைல்ட் லைன் சேலம் மாவட்ட வழிகாட்டி மற்றும் குழந்தைகள் உதவி மையமான மற்றும் சைல்டு லைன் சேவை மையமான தொன்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து 15 அரசு பள்ளிகளில் உள்ள 17,000 குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சிகளின் நிறைவாக சைல்ட் லைன் 1998 சேலம் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக வளர்ச்சிக்கான விளையாட்டு பிரச்சாரம் சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் சேலம் வின்செட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வைத்து குழந்தைகள் மற்றும் காவல் துறையினருக்கு இடையே விளையாட்டு பொருட்காட்சி நடைபெற்றது இதில் கைப்பந்து மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இப்போட்டியினை முனைவர் திரு.காஷ்மீர் ராஜ், சைல்டு லைன் சேவை நிறுவன இயக்குனர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் திரு.எஸ் ராஜாகாளீஸ்வரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு திரு.கென்னடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் சேலம் மாவட்டம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் 350 குழந்தைகள் காவல்துறையினர் குழந்தை நல குழுமம் சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர்கள் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கு பெற்றார்கள்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்