தூத்துக்குடி : கடந்த (21.06.2022) அன்று நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாசரேத் வாழையடி to வைத்தியலிங்கபுரம் சாலையில், உள்ள நாசரேத் மின் பகிர்மான அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி நகர் பகுதியை சேர்ந்த பூலையாபாண்டி மகன் ஆனந்தபாண்டி (51), என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் முறப்பநாடு மணக்கரை பகுதியை சேர்ந்த சங்கரசுப்பு மகன் அருள்ராஜ் (எ) அருணா (எ) சின்ன அருணா (30), நாசரேத் குறிப்பான்குளம் புதுப்பச்சேரி பகுதியை சேர்ந்த ரத்தினப்பாண்டி மகன் குணசேகரன் (எ) குணா (28) மற்றும் ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் முத்துகுமார் (எ) முத்து (21), ஆகியோரை நாசரேத் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான அருள்ராஜ் (எ) அருணா (எ) சின்ன அருணா, குணசேகரன் (எ) குணா மற்றும் முத்துகுமார் (எ) முத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பட்டாணி, அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப, அவர்கள் முறப்பநாடு மணக்கரை பகுதியை சேர்ந்த சங்கரசுப்பு மகன் 1) அருள்ராஜ் (எ) அருணா (எ) சின்ன அருணா, நாசரேத் குறிப்பான்குளம் புதுப்பச்சேரி பகுதியை சேர்ந்த ரத்தினப்பாண்டி மகன் 3) குணசேகரன் (எ) குணா மற்றும் ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் 3) முத்துகுமார் (எ) முத்து ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி மேற்படி 3 குற்றவாளிகளையும் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில், அடைத்தார். இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 34 பேர் உட்பட 148 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.