சேலம் : சேலம் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுக்கு இணங்க இன்று 6:30 மணி முதல் 11:30 மணி வரை சேலம் மாநகரம் நகர மலை அடிவாரம் துப்பாக்கி சுமன் தளத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்களின் பொறுப்பில் தமிழ்நாடு commando படையினர் மேற்பார்வையில் பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி சேலம் மாநகர காவல் ஆணையர் திருமதி.விஜயகுமார் அவர்கள் துவக்கி வைக்கப்பட்டது. இதில் சேலம் மாநகரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்கள் மற்றும் சிறப்பு காவல் படை ஏழாம் அணி போச்சம்பள்ளியை சேர்ந்த சேலம் மாநகர ஆணையர் உட்பட 23 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் 124 பெண் காவலர்கள் மொத்தம் 147 பேர் கலந்து கொண்டனர்.
பிஸ்டல் மற்றும் ரிவால்வர் பிரிவில் முதலிடம் திருமதி. தையல்நாயகி காவல்துறை கண்காணிப்பாளர் ஊரக உட்கோட்டம், சேலம் மாவட்டம் இரண்டாம் இடம் திருமதி.மகாலட்சுமி காவல்துறை கண்காணிப்பாளர் திருச்செங்கோடு உட்கோட்டம் நாமக்கல் மாவட்டம், திருமதி.ஆனந்தி காவல் உதவி ஆணையர் சேலம் மாநகரம் திருமதி.தீபா காவல் ஆய்வாளர் மொடக்குறிச்சி ஈரோடு மாவட்டம், மூன்றாம் இடம் திருமதி.துர்கா தேவி காவல் உதவி ஆய்வாளர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஓமலூர் கார்பைன் பிரிவில் முதலிடம் செல்வி. கீதா 2743 பெண் காவலர் ஈரோடு இரண்டாம் இடம் திருமதி. ராஜேஸ்வரி 240 முதல் நிலை பெண் காவலர் சேலம் மாநகரம் மூன்றாம் இடம் திருமதி. ஆதிலட்சுமி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சேலம், இன்சாஸ் பிரிவில் முதலிடம் செல்வி.ரமேஷ்வரி 2790 பெண் காவலர் ஈரோடு இரண்டாம் இடம் செல்வி.பவதாரணி 2598 பெண் காவலர் ஈரோடு மூன்றாம் இடம் தமிழழகி 2776 பெண் காவலர் ஈரோடு செல்வி.நந்தினி 3171 பெண் காவலர் ஈரோடு ஆகியோர்கள் போட்டியில் வென்றனர். அவர்களை சேலம் மாநகர காவல் ஆணையர் திருமதி. விஜயகுமாரி அவர்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.இறுதியாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவகுமார் அவர்கள் நன்றி உரை வழங்கினார்கள்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்