உலக நாடுகளில் 180க்கும் மேற்பட்ட அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனா, ஈரான், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், தென்கொரியா ஆகிய நாடுகள் அதிகம் இலக்காகி உள்ளன.
இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆக உள்ளது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசு தரப்பில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டது.
- அனைத்து அத்தியாவசய கடைகள் திறந்து இருக்கும்
- நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி
- அனைத்து அரசு அலுவலகங்கள் மூடல்
- பெட்ரோல் பங்க் திறந்து இருக்கும்
- திட்டமிடப்பட்ட திருமணம் நடத்தலாம்
- டாஸ்மாக், மால், தனியார் தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடல்
- ரேஷன்கடைகள் திறந்து இருக்கும்
- 5 பேருக்கு மேல் கூட தடை
- பிளஸ் 1 தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.
- சிலிண்டர் விநியோகம் செய்யலாம்.
- ஆவின் பால் நிலையம் திறந்து இருக்கும்.
- பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும்
- அனைத்து வழிபடு தலங்கள் மூடப்படும்
- பேருந்துகள் இயங்காது
- உணவங்கள், டீக்கடைகள் நிபந்தனையுடன் அனுமதி
- மருந்தகங்கள் திறந்து இருக்கும்
- ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பணி தொடரலாம்.
- அரசு பணியில் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதி
- ஓட்டலில் அமர்ந்து சாப்பிட தடை
- மரண ஊர்திக்கு தடை இல்லை
- அம்மா உணவங்கள் திறந்து இருக்கும்
144 ?