மதுரை : 144 தடை உத்தரவை மதிக்காமல் செயல்படக்கூடிய நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், கொள்ளைநோய் தடுப்புச் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் போன்ற சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறோம். இந்த வழக்குகளையாரும் சாதாரணமான கருதவேண்டாம். இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளியாக சேர்க்கப்படும் நபர்களால் வழக்கு முடியும் வரை அரசு வேலைக்குச் செல்லமுடியாது.
பாஸ்போர்ட் பெற முடியாது. கல்வி, தொழில், மருத்துவத்துக்காக வெளிநாடும் செல்ல முடியாது. அதே போல தற்போது தனியார் நிறுவனங்களிலும் வேலைக்கு சேர முடியாது காவல்துறையினரின் விசாரணை அறிக்கை பெற்ற பிறகே பணிக்கு அமர்த்தப்படுவீர்கள். எனவே இளைஞர்களும், பொதுமக்களும் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வந்து வழக்கில் சிக்கி வாழ்க்கையைத் தொலைக்காமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக அனைவரையும் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் கேட்டுக் கொண்டுள்ளார்.