இராமநாதபுரம்: கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 28.03.2020-ம் தேதி 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 162 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 71 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார்.IPS., அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்