அரியலூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அரியலூர் மாவட்ட பொது மக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் , மீறி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 138 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் 94 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அலட்சியம் வேண்டாம்… நமது நலம் மற்றும் சுற்றவர்களின் நலத்தில் அக்கறையுடன் செயல்படுவோம்.