இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடையை மீறிய 674 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 635 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. தடைகளை மீறியதாக நேற்று மட்டும் இராமநாதபுரம் 16, பரமக்குடியில் 19, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரையில் தலா 12, திருவாடானையில்9, முதுகுளத்துாரில் 11, உட்பட 91 வழக்குள் 120 பேர் மீது பதிவு செய்யப்பட்டு 105 பேரை போலீசார்கைது செய்துள்ளனர். 69 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளன.தடையை மீறயதாக மாவட்டத்தில் நேற்று வரை 705 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 674 பேரை கைது செய்துள்ளனர். 635 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் 03.04.2020-ம் தேதி 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 118 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 57 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்