அரியலூர் : நாடு முழுவதும் கொரோனா எனும் வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 24 மணி நேரமும் அயராது கடும் வெயிலிலும் சாலையில் நின்று காவல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் போர்கால அடிப்படையில் பணிபுரிந்து வரும் அனைத்து காவல் அதிகாரி, காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் மூன்று வேளையும் இலவச உணவு வழங்குமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் 1/4/2020 அன்று முதல் காவல்துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தொடர்ந்து உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.