மதுரை: கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 02.04.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 10830 நபர்கள் மீது மதுரை மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செய்து, அவர்களிடமிருந்து 5676 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் மதுவிலக்கு குற்றங்கள் செய்பவர்கள் மீது 1 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 நபரை கைது செய்து, 11 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விதி மீறல்களை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் மூலம் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன். IPS., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
      
                                











			
		    


