நாகப்பட்டினம்: கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து மாவட்டம் முழுவதுமாக தடை உத்தரவை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் இந்த ஆணையை பிறப்பித்தார். இதனடிப்படையில் 23ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அதோடு மட்டுமல்லாமல் இதனால் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கும் பரவுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் அடிப்படையில் பொதுமக்கள் யாரும் வெளியே வரக் கூடாது அப்படி மீறி வந்தால் அவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் அரசு ஆணையை மீறி தொடர்ந்து நாகப்பட்டினத்தில் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட நபர்கள் மீது நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் அவர்களின் தலைமையில் அவரது உத்தரவின்படி 548 வழக்குகள் மற்றும் 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.