காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 1412 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 1022 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடையை மீறி தேவை இல்லாமல் வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் இதுவரை 1759 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களின் நலனுக்காகவே இதுப் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைப் புரிந்து மக்கள் செயல்பட வேண்டும்.
தனித்திரு! விழித்திரு! வீட்டிலிரு!