சென்னை: சென்னை பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி கடந்த 01.11.2021 தினத்திலிருந்து காணவில்லை என சிறுமியின் பெற்றோர் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது “சிறுமி காணவில்லை” பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
விசாரணையில் காணாமல் போன 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் (எ) மனோஜ் பிரபாகரன் 21.என்பவர் சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்து, அச்சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில், இவ்வழக்கு W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கின் எதிரி மனோஜ் (எ) மனோஜ் பிரபாகரன் 21. பூந்தமல்லி என்பவரை கைது செய்தனர். மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.