தருமபுரி : தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது சில மாதங்களுக்கு முன்பு புட்டரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜித்(20) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி கையும் களவுமாக பிடித்து காவல் ஆய்வாளர் திரு.ஜெயசீல்குமார் அவர்கள் அஜித் மீது u/s:5(1) & 6 of pocso act சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.