திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், இயங்கிவரும் சைபர்கிரைம் காவல் நிலையத்தில், இதுவரை காணாமல் போன 64 லட்சத்து 21 ஆயிரத்து 235 ரூபாய் மதிப்புள்ள 486 செல்போன்களை மீட்டுகப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுளளது.
மேலும் (12.10.2022), ம் தேதி ரூபாய் 14 இலட்சம் மதிப்புள்ள 101 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் ஒப்படைத்தார்கள்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் இதுவரை மீட்கப்பட்ட 468 செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் இணைய வழி மூலமாக வேலை வாங்கித் தருவதாகவும், பரிசு விழுந்திருப்பதாகவும் OTP பெற்றுக்கொண்டு பண மோசடி செய்யப்பட்ட புகார்களுக்கு, துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஏமாற்றியவர்களின் வங்கிக் கணக்கை முடக்கி 2 இலட்சத்து 19 ஆயிரத்து 852 ரூபாய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இன்று திரும்ப பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இணையவழியாக மோசடி செய்ததாக பெறப்பட்ட புகார் மீது விசாரணை மேற்கொண்டு 92 இலட்சத்து 99 ஆயிரத்து 167 ரூபாய் குற்றவாளிகளின் வங்கி கணக்கில் முடக்கப்பட்டு அதில் 10 இலட்சத்து 68 ஆயிரத்து 129 ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட 20 நபரின் வங்கி கணக்கிற்கு திரும்ப பெற்று கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் இக்காலகட்டத்தில் இணையவழி மூலம் பணபரிவர்த்தனை மிகவும் இன்றியமையாததாக உள்ளது எனவும் எனவே பொதுமக்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது கவனமுடன் இருக்க வேண்டும் எனவும், செல்போனிற்கு வரும் OTP எண்களை பகிர வேண்டாம் எனவும் இணைய வழி குற்றங்கள் தொடர்பாக 1930 தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
486 செல்போன்களை மீட்டுக் கொடுத்து சிறப்பாக பணிபுரிந்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜு அவர்கள் தலைமையிலான காவல் ஆய்வாளர் திரு.ராஜ், உதவி ஆய்வாளர்கள் திரு.ராஜரத்தினம், திரு.மோகன் மற்றும் சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.