திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உட்கோட்டம், வடமதுரை காவல் நிலைய சரகம் பூசாரிபட்டி கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் திரு.எம்.எஸ்.முத்துச்சாமி இ.கா.ப அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா அவர்களின் உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் 28.07.2020 அதிகாலை 4 மணிக்கு அதிரடியாக சோதனை நடத்தியதில் 14 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனங்கள் 12 செல்போன்கள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூபாய் . 73,910/- பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைந்து செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படை போலீசாரை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.எம்.எஸ் முத்துச்சாமி இ.கா.ப. அவர்கள் பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா