காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க பாலுசெட்டிசத்திரம் மற்றும் மாகரல் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான
1 ) அஜித் ( 26 2 ) தினேஷ்குமார் 27. 3 ) ராஜ்குமார் 28. 4 ) புஷ்பராஜ் 23 . 5 ) நாகராஜ் 27. 6)ஆறுமுகம் 21. 7 ) சந்தோஷ் 26. 8 ) இளையராஜா 26. 9 ) பரமேஉள் 27 . 10 ) இளவரசு 24. 11 ) உதயகுமார் 29 . 12 ) சக்திவேல் 21. 13 ) நேதாஜி 20. ஆகியோர்கள் மீது பிரிவ 110 கு.வி.மு.ச – ன்படி பாலுசெட்டிசத்திரம் மற்றும் காஞ்சி தாலுக்கா காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படியும்,
ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடியான நெப்போலியன் 26 .என்பவர் மீது பிரிவ 107 கு.வி.மு.ச ன்படி ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படி வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ராஜ் கமல்















