திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குஜிலியம்பாறை சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பெண் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த எரியோடு காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு.குமரேசன் அவர்கள் தனது வாகனத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை 14 கிலோ மீட்டர் துரத்திச் சென்று வினோத்குமார் (24) என்ற நபரை மடக்கிப் பிடித்தார். மற்றொருவர் தப்பிச் சென்று விட தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.வேல்முருகன் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு.தினேஷ் பிரபு ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்ட மற்றொரு நபரான ராஜேந்திரன் (16) என்பவரை மடக்கிப் பிடித்தனர்.
துரிதமாக செயல்பட்டு நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை பிடித்த காவலர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
