சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆலம் பச்சேரி பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவர் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதனை சிறுமி மறுக்கவே அவரைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். மேற்படி வீடியோவை காட்டி விஷ்வாவின் நண்பர்கள் அச்சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அச்சிறுமி 10.10.2019 அன்று அளித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் u/s 342, 354(c),366(A), 376(3), 509 IPC & 6,12,14(1) of POCSO Act & 67(A) ,67(B) of IT Act-ன் கீழ் வழக்குப்பதிந்து கவியரசன், அருண்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.