திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவு போனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021, 2022 மற்றும் 2023 ம் வருடத்தில், காவல் நிலையங்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலமாக அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ரூ.13,75,000/- மதிப்பிலான 83 ஆண்டிராய்டு வகை செல்போன்கள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட செல்போன் உரிமையாளர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு இன்று 08.03.2023 நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்கள் உரிமையாளர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்கள். மேலும் சிறப்பாக பணியாற்றிய திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் அலுவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.